வாயுள்ள பிள்ளை பிழைக்கும் ( ஹிட்லர் )
சர்வாதிகார ஹிட்லர் பற்றி அனைவரும் அறிவர் . நாசிக் கட்சியின் தலைவர்,ஜெர்மனி நாட்டின் சான்சலர்,யூதர்களுக்கு எதிரானவர் , கொடுங்கோலர் , தனது சுய சரிதை புத்தகமான "மெயின் கேம்ப்" இல் இந்தியர்களை பற்றி இழிவாக எழுதியவர் , ஸ்டாலின் படைகளிடம் தோல்வியுற்று தற்கொலை செய்து கொண்டவர் , போன்ற தகவல்கள் நாம் அறிந்ததே . இதோடு இவரை பற்றிய மற்றொரு தகவல் இவர் ஒரு சிறந்த பேச்சளார் .அவருடைய பேச்சு எந்த அளவுக்கு இருந்தது என்பதை பின்வரும் தகவல்கள் மூலம் நீங்கள் அறியலாம் .
ஹிட்லரின் ஆரம்ப கால வாழ்க்கைப் பற்றி 'இயன் கெர்சா ' என்பவர் விரிவான புத்தகமொன்று எழுதியிருக்கிறார் . அதில் உள்ள தகவல்கள் :
- நாசிக் கட்சியின் சிறிய கூட்டமொன்றில் 1919 ஆம் வருடம் ஹிட்லர் முதன்முறையாக மேடையேறிப் பேசினார் .கூட்டத்தில் இருந்தவர்கள் நூறு பேர் .ஆனால் அவர் பேச்சுத் திறமை விரைவில் பரவி , நாலு மாதத்துக்குப் பின் நடந்த கூட்டத்துக்கு 2000 பேர் வந்தார்கள் .நாலு வருடங்களில் சொந்தப் பத்திரிகை ஆரம்பித்தார் .55,000 பேர் சந்தா செலுத்தித் தொண்டர் படையில் சேர்ந்தார்கள் .
- மேடைப் பேச்சின் பொது அட்டகாசமாக ஆர்ப்பாட்டம் செய்வது ஹிட்லரின் வழக்கம் .ஒரு முறை அவர் பேசி முடித்த போது ஐந்து பவுண்டு எடை குறைந்தது .இருபது புட்டி மினரல் வாட்டர் குடித்தார் . ( நமது அரசியல்வாதிகளால் முடியுமா ? )
- அரசாங்க பைல்களை கவனிக்கும் விசயத்தில் ஹிட்லர் மகா சோம்பேறி .பல அமைச்சர்கள் விஷயத்தை வாயாலேயே சொல்லி ,வாய்மொழியாகவே உத்தரவு பெறுவார்கள் .பகல் மூன்று மணி வரை தூங்கி விட்டு ,சாப்பாடு முடிந்ததும் தோட்டத்தில் உலாவிவிட்டு ,சினிமா பார்த்தப் பின் அரசாங்க அலுவலைக் கவனிக்க ஆரம்பிப்பார் .வளவளவென்று பேசிக்கொண்டே இருப்பார் .மந்திரிகள் கொட்டாவி விடுவதும் கடிகாரத்தைப் பார்ப்பதுமாக இருப்பார்கள் .அதை ஹிட்லர் லட்சியம் பண்ண மாட்டார் .
( எது எப்படியே நமது சுதந்திர நாயகன் நேதாஜி , ஹிட்லரை சந்தித்தப் போது இந்திய விடுதலைப் பற்றி நேதாஜிக்கு சில ஆலோசனைகள் கூறியுள்ளார் . ஆனாலும் , "மெயின் கேம்ப்" புத்தகத்தில் உள்ள இந்தியர்கள் பற்றிய விமர்சனத்தை நேதாஜி அவர்கள் நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தும் நீக்க மறுத்து விட்டார் ஹிட்லர் .)
கருத்துகள்