இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தானே தோன்றியதல்ல "தானே"

படம்
க டலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் கடந்த நூற்றாண்டில்தான் தொடங்கியது. ஆஸ்திரேலியா நாட்டவர்கள்தான் முதன் முதலில் புயலுக்கு பெயர் சூட்டினார்கள். குறிப்பாக தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை பேரழிவு ஏற்படுத்தும் புயல்களுக்கு வைத்தனர்.  1950-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவும் புயல்களுக்கு பெயர் சூட்டும் வழக்கத்தை தொடங்கியது. இதையடுத்து சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியது. அதன்படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.   அந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்திய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க தீர்மானிக்கப்பட்டது.   இந்த பிராந்தியத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வங்கக்கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை இந்த 8 நாடுகளும் பட்டியலாக தயாரித்து கொடுத்துள்...

ஆசிரியர் பணிக்கு இலக்கணம் "பாரதிதாசன்"

படம்
எ ல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதாக வையத்தை நோக்கி மக்களை இட்டுச் செல்லும் பெரும் பொறுப்பினை ஏற்று, தமிழ்க் கவிதைப் பணி ஆற்றிவந்த புரட்சிக்கவிஞர் அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளிலே இந்தக் கருத்துகளின் கூறுகள் எங்கும் காணப்படும். பாரதிதாசனார் என்ன எழுதினாரோ அதன்படி நடக்கிறாரா என்று கூர்ந்து நோக்கும் கண்கள் ஓராயிரம் உண்டு என்பது அவருக்குத் தெரிந்ததுதான்!  அவர் சொன்ன கருத்துகளை ஏற்றுக் கொள்ளாதவர்களும், எதிர்த்தவர்களும் அவரை வேட்டை நாய்கள் போல் கவனித்து வந்தார்கள். இதனைப்பற்றித் துளிக் கவலையும் பாரதிதாசனாருக்கு இருந்ததில்லை. இழிவு ஒன்று காணில் அதன் சல்லிவேரையும் கூடக் கல்லி எறிவதில் ஏற்படும் இன்னல் எதுவாயினும் ஏற்பதும், இன்னுயிர் போவதானாலும், தாம் கொண்ட கொள்கையில் இம்மிபிறழாமல் வாழ்வதும் அவருள் ஊறிப்போன பழக்கம்! மாணவப்பருவம் தொடங்கி, தம் மூச்சு முடியும்வரையில் இதையே புரட்சிக்கவிஞர் நிலைநாட்டிக் கொண்டிருந்தார். புரட்சிக்கவிஞர் தமிழாசிரியராய் வேலை-பார்த்தகாலை, புதுவை, பிரஞ்சிந்தியா என்ற தனியாட்சியில் இருந்ததல்லவா! அக்காலத்தில் தமிழ்ப் பாடநூல் புதுவைக்கென எதுவும் இல்லை. அன்...

திருப்பூர் தற்கொலை நகரமா?

படம்
               தமிழ்நாட்டில் உள்ள  தொழில் நகரங்களில் முக்கியமான தொழில் நகரம் திருப்பூர் . எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும் நகரம் . நான் கல்லூரி படிக்கும் காலங்களில் , திருப்பூரில் பைக் ஓட்டுவது மிகவும் சாவலான விஷயம்(    மூன்று ஆண்டுகள் என் கல்லூரி காலங்கள் திருப்பூரில் தான் கழிந்தது) .அந்த அளவிற்கு சாலைகளில் போக்குவரத்து அதிகமாக காணப்படும்.இன்றும் திருப்பூர் சென்றால் , பனியன் மூட்டைகளை பைக்கில் வைத்து , எவ்வளவு சிறிய குறுகலான சாலையிலும் , அலட்டிக்காமல் ஓட்டி  செல்லும் மனிதர்களை பார்க்காமல் இருக்கமுடியாது. திருப்பூர் நகரில் பனியன் கம்பெனிகள் இல்லாத தெருக்களே கிடையாது. ஒரே சிறிய அறையில் இயங்ககூடிய கம்பெனியிலிருந்து பெரிய அடுக்குமாடி கட்டடித்தில் இயங்ககூடிய கம்பெனிகள் வரை ஏரளாமான கம்பெனிகள்  உள்ளன . தென் தமிழக மக்களுக்கு வாழ்க்கை கொடுத்து காப்பாற்றி கொண்டிருக்கும் மாநகரம் .ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்து வரும் திருப்பூர், கடந்த 20 ஆண்டுகளில் வியக்கத்தகுந்த தொழில் வளர்ச்சியை எட்ட...

காகிதப்புலிகளை உருவாக்கும் கல்வி

 எப்படியோ , சமச்சீர் கல்வி பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்து பள்ளிகளிலும் கற்றல் - கற்பித்தல் நிகழ்வு  திறம்பட நடந்து கொண்டிருக்கிறது .இதில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியோ இல்லையோ , பெற்றவர்களுக்கு தான் பெரும் நிம்மிதி .அதிலும் குறிப்பாக பொதுத்தேர்வு எழுதப் போகும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர், இரண்டு மாதங்களாக என்ன செய்வதென்று தெரியாத நிலையில், சொல்லொணாக் கவலையில் ஆழ்ந்திருந்தனர். அரசியல் விருப்பு வெறுப்பு மாணவர்களின் படிப்பு உரிமையில் தலையிடக் கூடாதென்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள கருத்து, அனைவராலும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.                     தீர்ப்பு வருவதற்கு இடைப்பட்ட காலத்தில் , பள்ளிகள் வினோதமான முறையில் இயங்கின . எங்கள் ஊரில் (தேங்காய் என்னை தயாரிக்கும்  )தொழிற்சாலைகள் அதிகம் என்பதால் அங்கும் , குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலை ( பொடாரன் கம்பெனி ), வங்கிகள் ,  தபால்  நிலையம் , எல்.ஐ.சி ஆகிய  இடங்களுக்கு அழைத்துச் சென்று பணம் செலுத்தும்   விதம் , தொழிற்சாலை இயங்கும் மு...

இந்திய அரசு ஆதரவு - கோத்பய ராஜபக்ச சாட்சியம்

படம்
இந்த செய்தி நாம் ஏற்கனவே அறிந்த செய்திதான் . இருந்தாலும் இந்தக் கட்டுரையை படிப்பதன் மூலம் உண்மை உள்ளங்கை நெல்லிக் கனியாய் விளங்கும் . இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இருந்த நெருக்கமான ஒத்துழைப்பின் மூலமே நாட்டில் இருந்து தீவிரவாதத்தை முற்றாக அழிக்க முடிந்தது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மிக் விமானக்கொள்வனவு ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட சண்டேலீடர் நிறுவனத்துக்கு எதிராக, 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கல்கிசை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆகஸ்ட் 16 ஆம் தேதி  இந்த வழக்கில் சுமார் 2 மணி நேரம் கோத்தாபய ராஜபக்ச சாட்சியமளித்திருந்தார். அவர் தனது சாட்சியத்தில், சிறிலங்காவில் போரின் போது என்ன நடக்கிறது என்பது பற்றி தகவல்களை இந்திய அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக வழங்கி வந்தாகவும் கூறியுள்ளார். 1980களில் வடமராட்சியை கைப்பற்றும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு இந்தியாவுடனான தவறான புரிதல்களை காரணம் என்று கூறிய அவர், அப்போது இந்தியா தலையிட்டிருக்காது போயிருந்தால் 25 ஆண்டுகளுக்க...

நாளை சென்னை தினம்

படம்
    கெட்டும் பட்டணம் போய் சேர்  என்று ஒரு பழமொழி உண்டு .ஆனால் , எத்தனையோ உள்ளங்கள் வாழ்வதற்காக தமிழகம் மட்டுமின்றி , இந்தியாவின்  பல மாநிலங்களில் இருந்தும்  சென்னையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர் . இந்திய வரலாற்றில் மதராசப்பட்டினத்துக்கு பெரும்  பங்கு உண்டு. காலச் சக்கரத்தில்  பல முக்கிய நிகழ்வுகள் தடம் பதித்த  சென்னையை பெருமை  படுத்தும் விதமாக , நாளை சென்னை தினம் கொண்டாடப் படுகிறது .     தமிழகத்தின் தலைநகரமாக உள்ள சென்னை, மாநிலத்தில் உள்ள அனைவரையும் கவர்ந்த ஒரு மாநகராக காட்சி அளிக்கிறது. தமிழகத்தின் மிகப்பெரிய நகரும், சர்வதேச அளவில் பிரபலமான நகராகவும் விளங்கி வருகிறது.  371 ஆண்டுகளுக்கு முன்பு, 1639 ஆக. 22ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த, பிரான்சிஸ் டே மற்றும் அவருடைய மொழி பெயர்ப்பாளரான ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் விஜய நகர அரசின் கீழ் இருந்த வந்தவாசியை ஆண்ட வெங்கடாத்ரி நாயக்கரிடம் (இவருடைய தந்தைதான் தமர்லா சென்னப்ப நாயக்கர்) பேசி, கடற்கரை அருகே இடத்தை வாங்கி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர். ந...

சிறந்த அறிவியல் சாதனைகள்

ஆனந்த விகடனில் எழுத்தாளர் சுஜாதா எழுதிக்கொண்டிருந்த 'கற்றதும் பெற்றதும்' தொடரை நம்மில் பலர் படித்திருப்போம். ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், "இந்த ஆண்டின் சிறந்த . . ." என்றொரு பட்டியலை வெளியிடுவார். "சிறந்த ஸ்வீட்", "சிறந்த காரம்" என்று ஆரம்பித்து, "சிறந்த பாடல்", "சிறந்த புத்தகம்" என்று எங்கெல்லாமோ அந்தப் பட்டியல் நீளும். அதனை நினைவூட்டும் வகையில், அமெரிக்காவின் பிரபல டைம் பத்திரிகையில் சென்ற ஆண்டின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி நிபுணர்கள் எழுதியிருந்தார்கள். அமெரிக்காவில் நடக்கும் ஆராய்ச்சியைப் பற்றி மட்டும் பேசாமல், உலகம் முழுவதைப் பற்றியும் பேசியிருந்தார்கள். அறிவியல் ரீதியில் உலகம் தற்பொழுது எங்கு உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவும் பட்டியல். அதனை  உங்களுக்காக இங்கே பகிர்ந்து கொள்கிறேன் .. 1. Large Haldron Collider ஸ்விட்சர்லாண்ட் - ஃப்ரான்ஸ் நாடுகளின் எல்லைப் பகுதியின், CERN (European Organization for Nuclear Research) நிறுவனம் கட்டிய பிரம்மாண்டமான Particle Acceleratorதான் அது. உல...

பேரறிவாளன் உறவினர்களுக்கு எழுதிய கடிதம்:

படம்
ரா ஜீவ் காந்தி கொலை வழக்கு சூத்திரதாரிகளில் ஒருவர் எனக்கூறி மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் தன் தரப்பு நியாயங்ளை தனது குடும்பத்தினருக்கு ஒரு கடிதமாக எழுதியுள்ளார். கடிதத்தில் தனது மனப்புலம்பல்களையும் தனது பெற்றோர்களுடன் பகிர்ந்தகொண்டுள்ளார்.இந்த கடிதம்  செய்தி.காம் என்ற இணையத்தில் இன்று வெளியிடப்பட்டிருந்தது . உங்களுக்காக இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன் . தூக்குத் தண்டனையை எந்த நேரத்திலும் எதிர் நோக்கியிருக்கும் பேரறிவாளன், சிறையிலிருந்து குடும்பத்தினருக்கு எழுதியுள்ள கடிதம்:- பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே,  வணக்கம்.  நான், அ.ஞா.பேரறிவாளன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவாய் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள் முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப் புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன் என்பதாலும், அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன். தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன் என்பதால் மனித...

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பம்

தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் தேசிய வருவாய் வழித்திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தில் மாணவர்களை தேர்வு செய்ய நவ., 20 ல் தேர்வு நடக்க உள்ளது. மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் இத்தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஆக., 30 வரை வழங்கப்படும். கடந்த கல்வி ஆண்டில் 7ம் வகுப்பில் 60 சதவீதத்திற்கு மேல் பெற்று, தற்போது 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 1.50 லட்சத்திற்கு மிகக்கூடாது. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணும், மற்றவர்கள் 55 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். ஒரே விண்ணப்பத்தில் 2 தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வுத் துறை மண்டல துணைஇயக்குனர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், கேந்திரிய வித்யாலயா மண்டல அலுவலகங்களில் படிவத்தை பெறலாம். தேர்வு கட்டணம் ரூ. 50. இதை ஒரே செலானில் கருவூலத்தில் செலுத்தி, விண்ணப்பத்தை ஆக., 30க்குள் மண்டல அரசு துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்திய விஞ்ஞானிகளுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு

படம்
உ லகிலேயே மிகப் பெரிய டெலஸ்கோப் அமைக்கும்  திட்டத்தில் இந்திய விஞ்ஞானிகளுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்துள்ளது. முன்னதாக மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் இந்திய விஞ்ஞானிகள் அமைத்த பிரமாண்டமான ரேடியோ டெலெஸ்கோப்பை தான் இதுவரை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் அடிக்கடி பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது உலகிலேயே மிகப்பெரிய டெலஸ்கோப்பை உருவாக்கும் திட்டத்தில் ஆஸ்த்திரேலியா இறங்கியுள்ளது. “உலகில் தற்போது நவீன டெலஸ்கோப்பை விட பத்தாயிரம் மடங்கு பெரியதாக ஸ்குவர் கிலோமீட்டர் அர்ரே டெலஸ்கோப் அமைக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகளும் பங்கேற்க வேண்டும். இப்பிரப்பஞ்சம் குறித்த விண்வெளி ஆய்வாளர்களுக்கு இந்த டெலஸ்கோப் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சர் கிம்கார் கூறினார். உலகிலேயே மிகப் பெரிய டெலச்கோப் அமைப்பது பற்றி தற்போது ஆஸ்த்திரேலிய அமைச்சர் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்த திட்டத்தில் ஏற்கெனவே நியுசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. தற்போது இந்திய விஞ்ஞானிகளுக்கும் அந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ...

கல்வி - நல்ல வியாபாரம்

 ஒரு நாட்டின் வளர்ச்சியில் கல்விக்கு முக்கியமான பங்கு உண்டு . அதே போல் தனி மனித வாழக்கைக்கும் கல்வி என்பது ஒரு அரிய புதையல் . "கல்வி இல்லாதவர் களர்நிலம் போன்றவர்' என்பார் பாரதிதாசன். அப்படிப்பட்ட கல்வி, இப்போது வணிகமயமாகிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் தவறில்லை.               ஆமாம்   நமது நாட்டின் கல்வியின் பாதை , வணிக ரீதியாக போய்க்  கொண்டிருக்கிறது .பிரேசில் நாட்டு கல்வியாளரான பாலோ ' பிரையிரே ' நமது கல்வி முறையை வங்கி கல்வி முறை என்று சொல்லியிருக்கிறார். அவர் அப்படி கூற காரணம் வேறு ( வங்கியில் பணத்தை டெப்பாசிட் செய்வதைப் போல ஆசிரியர் என்பவர் மாணவன் தலையில் தகவல்களை இட்டு நிரப்பும் முரட்டு அமைப்பிற்கு கல்விமுறை எனப் பெயரிடுவதா என்று அவர் கொதித்தார்). ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் கல்விக்கூடமே ஒரு வங்கியை போல தான் . அது தொடக்கப் பள்ளியாகவும் இருக்கலாம் , மருத்துவ கல்லூரியாகவும்  கூட இருக்கலாம். முன்பெல்லாம் கல்வியை நன்கொடையாக (இலவசக் கல்வி) நமக்குத் தருவார்கள். ஆனால், இன்றோ கல்விக்கு நாம் நன்கொடை (பணம்) வழங்கும்...

ஊழல் பற்றி நடிகர் கமல் கருத்து

அன்னா ஹஸாரே குறித்து முதல்முறையாக தமிழகத்திலிருந்து ஒரு பிரபலக் குரல் எழுந்துள்ளது. குரல் கொடுத்திருப்பவர் கமல்ஹாசன். நாட்டின் மீதுள்ள பற்று காரணமாகத்தான் இன்னும் நாம் லஞ்சம் ஊழலை சகித்துக் கொண்டு வாழ்கிறோம் என்றும், மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அன்னா ஹஸாரே போராட்டத்துக்கு வட இந்திய நடிகர் நடிகைகள் வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஆனால் தென்னிந்தியாவில் இதுவரை ஒருவரும் இதுபற்றி வாயே திறக்காமல் பெவிக்கால் போட்டு ஒட்டிக் கொண்டுள்ளனர். அரசியல்வாதிகள் தெளிவாகப் பேசவில்லை.திரையுலகினரும் கூட இதுகுறித்து இதுவரை எதையும் பேசாமலேயே உள்ளனர். இந்த நிலையில் முதல் குரலை எழுப்பியுள்ளார் நடிகர் கமல்ஹாஸன். அன்னா ஹஸாரேவின் போராட்டம் குறித்து மறைமுகமாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல் கூறுகையில், "மக்களிடம் வரி மூலம் பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு தகுந்தாற் போல் அடிப்படை வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணம் லஞ்சம், ஊழல் என போகிறது. ஆனாலும் நாட்டின...

அறிவியல் உண்மைகள்

நீண்ட நாளைக்கு பின் அறிவியல் உண்மைகள் தலைப்பு  பற்றி எழுதுகிறேன் .  சயனைடு உட்கொள்வதால் மனிதன் இறப்பதேன் ?    சயனைடுகளில் - பொட்டாசியம் சயனைடு (KCN) ,சோடியம் சயனைடு (NaCN) ஆகியவை நச்சுத் தன்மை கொண்டவை . இந்த கனிம உப்பிலுள்ள சயனைடு அயனி (CN -) தான் நச்சுப் பண்புக்குக் காரணம் .        இந்த சயனைடை மனிதன் உட்கொண்டவுடன் சயனைடு அயனி எளிதில் ரத்த ஓட்டத்தை அடைகிறது ; இரத்துச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமொகுலோபினோடு  ( சுவாச நிறமி ) இணைகிறது .குறிப்பாக ஹீமொகுலோபினில் உள்ள இரும்பு அணுக்களோடு இணைவதினால் ஆக்சிஜனை இணைக்கும் திறன் துண்டிக்கப் படுகிறது .இதனால் சுவாசம் தடைப்பட்டு நின்று  விடுகிறது .உடல் உறுப்புகள் அனைத்தும் ஆக்சிஜன் இல்லாத நிலை ஏற்பட்டு இறப்பு உறுதியாகிறது    இயற்கை நிறங்காட்டிகள்       அமிலமா(acid ) ? காரமா (base) ?  எனக்  கண்டறிய  சில காட்டிகளை (indicators) பயன்படுத்துவார்கள்  .நீல லிட்மஸ் தாளை தேய்த்து எடுத்தால் சிகப்பாக மாறினால் அது அமிலம் என்றும் , சிகப்பு  லிட்மஸ்...

எது சமச்சீர் கல்வி?

படம்
சமச்சீர் கல்வியில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவித்து விட்டதால், இக்கல்வியாண்டு முதலாக தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி உறுதியாகிவிட்டது. இனி பள்ளிகள் எல்லாவற்றிலும் பாடநூல் விநியோகமும், கற்பித்தல் பணியும் தொடங்கிவிடும். தமிழகப் பள்ளிகளில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவிய இரண்டும்கெட்டான் நிலைமைக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது என்பதுவரை மகிழ்ச்சி. தமிழகத்தில் அனைவருக்கும் பொதுவான பாடத்திட்டம் வேண்டும் என்பதற்காக, 2006-ம் ஆண்டு முதலாகத் தொடர்ந்து குரல் கொடுத்தது மற்றும் வழக்குத் தொடுத்ததில் பொதுவுடைமைக் கருத்துச் சார்புள்ள அறிவுஜீவிகளுக்கும், சில கல்வியாளர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. இவர்களது கோரிக்கை தி.மு.க. அரசால் ஏற்கப்பட்டு, 2010-ல்தான் தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளி அளவில் ஒரு வகுப்புக்கு மட்டும் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தது. இதுநாள்வரை, சமச்சீர் கல்விக்காகக் குரல் கொடுத்த இவர்கள், தற்போது தங்கள் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தால் அது தவறு. இப்போதுதான் அவர்கள் களத்தில் நின்று காணவும், குரல்கொடுக்கவும் வேண்டிய உண்மையான தேவை மேலதிகமா...

இறந்துபோன பிரபலங்களின் கதை !

   இங்கிலாந்தில் உள்ள ஒரு  நிறுவனம் வருடந்தோறும் ஒரு வினோதமான காரியம் செய்து  வருகிறது  .ஒரு குறிப்பிட்ட வருடத்தில் இறந்து போனவர்களில்  பிரபலமானவர்களைத் தேர்ந்தெடுத்து வகை வாரியாக  பிரித்து , தனிதனி புத்தகமாக வெளியிட்டு வருகிறார்கள் .கிறுக்குத் தனமான புள்ளிகள்,  ஹீரோக்கள் ,பொழுதுபோக்கு  கலைஞர்கள்  , போக்கிரிகள் இது போன்ற  தலைப்புகளில் புத்தகம் வருகிறது . மனிதர்களின் குணாதிசியங்களை  காட்டுவதே தங்கள் நோக்கம் என்கிறார்கள் .  அந்த   புத்தகங்களில்  இருந்த சில வினோத தகவல்கள் :    ஆர் .டி .லாங் என்ற மனோத்தத்துவ நிபுணர்  ,தினம் ராத்திரி மொட்டை மாடிக்கு போய்  உட்கார்ந்துக்  கொண்டு சந்திரனைப்  பார்த்து ஊளையிடுவாராம்  . ( அமாவாசையன்று என்ன  செய்வாரோ  என்று தெரியவில்லை) . ஆல்பி   ஹிண்ட்ஸ்   என்ற கொள்ளைக்காரன் எப்போதும் தன வழக்குக்குத் தானே வழக்கறிஞராக ஆஜராவனாம் .ஏதாவது சட்டப் பிரச்சினையில் நீதிபதி தலையை   சொரிந்து கொண்டாரானால் ' கனம் நீதிபதி ...

இந்தியாவின் ஆதரவு "ஜி மெயிலுக்கே" ........

படம்
கம்ப்யூட்டர் உலகில், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள எந்த மீடியம் இன்று அதிகம் பயன்ப டுகிறது என்ற கேள்விக்கு, யாரும் ஜி மெயில் என்று உடனே, சந்தேகமின்றி சொல்வார்கள். அந்த அளவிற்கு உலகளாவிய அளவில் விரிந்து, வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது கூகுளின் ஜிமெயில். சரி, எந்த நாட்டில் இது அதிக வாடிக்கை யாளர்களைக்கொண்டுள்ளது என்ற கேள்வி க்கு என்ன பதில் கிடைக்கும். ஆச்சரியப்படாதீர்கள், அது இந்தியா தான். அமெரிக்க நாட்டில் இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையைக்காட்டிலும் இருமடங்குக்கு மேலாக இந்திய வாடிக்கையாளர்கள் இருப்பதாக, அமெரிக்கா வில் இயங்கும் காம்ஸ் கோர் என்ற ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. 62% மக்கள் இந்தியாவில் இதனைப் பயன்படுத்துகின்றனர். அடுத்ததாக, இன்டர்நெட் அதிகம் பயன்படுத்தப்படும் பிரேசில் நாட்டில், 41% பேர் ஜிமெயிலைப் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் 29%. இந்தியாவில் தான் கூகுள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் பெரிய அளவில் வரவேற்பு இருப்பதாகவும், இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.          நன்றி - செய்தி.காம்

இன்றைய நகைச்சுவை

தாங்க முடியாத தலை வலியுடன் ஒருவர் மருந்து கடைக்கு ஓடி வந்தார் .  " என் தலைக்கு எதாவது தர முடியுமா?" என்று பதறினார்  .  " தலையா ! அதை வாங்கி வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வது ? " என்றார் மருந்துக் கடைக்காரர் .

இன்றைய திருக்குறள்

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின். கலைஞர் உரை: துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும். மு.வ உரை: இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும். சாலமன் பாப்பையா உரை: துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும். Translation: Joy of joys abundant grows, When malice dies that woe of woes. Explanation: If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight. 

நீங்களே சொல்லுங்கள் யார் செய்தது குற்றம் ?

  DÚWÖ| UÖYyP• TYÖ A£f¥ E·[‰ U›X•TÖz. Cjh·[ AWr ÚU¥ŒÛX T·¸eiP†‡¥ rUÖŸ 1,300 UÖQY-UÖQ«L· Tz†‰ Y£f\ÖŸL·. C‹R T·¸eiP†‡¼h LP‹R 2 SÖyLºeh ˜Á“ rUÖŸ 25 YV‰ U‡eL†ReL YÖ¦TŸ J£YŸ Y‹RÖŸ. AYŸ T·¸›Á RÛXÛU Bp¡VŸ (ÙTÖ¿“) h“Xyr–›P• ÙNÁ¿, SÖÁ LÙXeP¡Á ÚSŸ˜L ER«VÖ[WÖL ÚYÛX ÙNš‰ Y£fÚ\Á. EjLºÛPV T·¸eiP†‡Á L³TÛ\ r†R• ÙNšVTPÖU¥ E·[RÖL LÙXeP£eh “LÖŸ Y‹‰ E·[‰. G]ÚY AYŸ GÁÛ] C‰ h½†‰ «NÖ¡†‰ Y£•Tz ÙR¡«†RÖŸ GÁ¿ i½]ÖŸ. ÚU¨• T·¸eiP†‡¥ E·[ L³TÛ\eh• A‹R YÖ¦TŸ ÙNÁ¿ TÖŸ†RÖŸ. AÚTÖ‰ L³TÛ\ r†R• ÙNšVTPÖU¥ C£‹R‰. C‰ h½†‰ A‹R YÖ¦TŸ RÛXÛU Bp¡VŸ h“Xyr–›P• ÚLyPÖŸ. AÚTÖ‰ AYŸ LP‹R 3 SÖyL[ÖL RƒŸ YWÖRRÖ¥, L³TÛ\ r†R• ÙNšVTP«¥ÛX GÁ¿ i½]ÖŸ. AÛR†ÙRÖPŸ‹‰ A‹R YÖ¦TŸ, U›X•TÖz FWÖyp A¨YXL†‡¼h ÚTÖÁÙNš‰, Ajf£‹R ‰ÛQ†RÛXYŸ SÖLWÖÇ U¼¿• Gµ†RŸ UÖ¡˜†‰ BfÚVÖ¡P˜•, RÖÁ LÙXeP¡Á ÚSŸ˜L ER«VÖ[Ÿ ÚTrYRÖL i½·[ÖŸ. ‘\h, U›X•TÖz AWr T·¸›Á L³TÛ\ r†R• ÙNšVTPÖU¥ E·[‰. AÛR r†R• ÙNšV, ‰“W° T‚VÖ[ŸLÛ[ T·¸eiP†‡¼h AĐ‘ ÛYjL· GÁ¿ i½]ÖŸ. AÛR†ÙRÖPŸ‹‰ 4 ‰“W° T‚VÖ[ŸL· T·¸eiP†‡¼h Y‹R]Ÿ. ‰“W° T‚VÖ[ŸL· T·¸eiP†‡¼h Y‹R EPÁ, L³TÛ\ÛV r†R•...

என்னமோ? எதோ ? சில தகவல்கள்

 சொந்த வேலைகள் காரணமாக கடந்த நான்கு தினங்களாக  இடுகை எழுத முடியவில்லை .  என்ன எழுதுவது என்று தெரிய வில்லை .அதனால் நான் படித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்  புனித அல்ஃபோன்சா  இந்தியாவின் முதல் பெண் புனிதர் ஆவார். காந்தியடிகளுக்குத் தமிழில் கையொப்பமிடக் கற்றுத் தந்தவர் இரட்டைமலை சீனிவாசன் ஆவார். பொதுவாக எல்லா நொதிகளும் புரதங்களே என்று பலகாலமாய் நம்பப்பட்டு வந்தது. பின்னரே ரிபோசைம் எனும் நியூக்ளிக் அமிலங்களும் நொதிகளாய்ச் செயல்படுவது கண்டறியப்பட்டது. இராவண காவியத்தை எழுதிய புலவர் குழந்தை தந்தை பெரியாரின் கட்டளையை சிரமேற்கொண்டு இருபத்தைந்தே நாட்களில் திருக்குறள் முழுமைக்கும் உரை எழுதினார். எறும்பு தின்னிகளின் இரைப்பையில் செரிமானத்திற்குதவும் ஐதரோகுளோரிக் அமிலம் சுரக்கப்படுவதில்லை. அவை தங்களின் இரையான எறும்புகளின் உடலில் உள்ள ஃபார்மிக் அமிலத்தையே செரிமானத்திற்கு நம்பி உள்ளன. மொகலாயர்களின் வரலாற்றை உலகறியச் செய்த அக்பர் நாமாவின் ஆசிரியர் அபுல் ஃபசல் மொகலாய இளவரசன் ஜகாங்கீர் தீட்டிய சதியால் தலைவெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். அதிக ...

ஒரே புகைப்படங்கள் வெவேறு காலநிலைகளில்

படம்
நன்றி : சாளரம்

இன்றைய நகைச்சுவை

ஒரு முதலை இன்னொரு முதலையிடம் கேட்டது : " அந்த வக்கீல் ஆழத்தில் இறங்கி வசமாய் மாட்டிக்கொண்டாரே ... ஏன் நீ அவரை விழுங்கலே ? "   மறு  முதலையின் பதில் : " சேச்சே ... அது தொழில் தர்மம் இல்லை .ஒரே தொழில் இருக்கிறவர்கள் ஒருவரையொருவர் தாக்கக்கூடாது ."

கணினி பராமரிப்புக்கு கைகொடுக்கும் ஆலோசனைகள்!!

படம்
" உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகில் நம் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கணணி தான் வாழ்க்கையாக அமைந்துள்ளது. கணணியில் தான் பெரும்பாலான நமது நேரம் செலவிடப்படுகிறது. நிதி நடவடிக்கைகள் முதல் நமக்கு பிடித்த இசைகளை கேட்பது வரை அனைத்துமே கணணி வழி தான் நம்மில் பலர் செய்கிறோம். நண்பர்களிடம் உரையாடுகிறோம், மின்னஞ்சல்களை அவ்வப்போது பார்த்து பதில் அனுப்புகிறோம். இந்த நிலையில் கணணி வேலை செய்யாமல் போனால் என்ன ஆகும்? நாம் கணணியில் தற்போது செய்து கொண்டிருக்கும் பணி காணாமல் போய் விடுகிறது அல்லது நாம் சேமித்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம் போய் விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். கணணியில் பணியாற்றும் அனைவருக்கும் தங்களது வாழ்நாளில் இந்த மாபெரும் சிக்கல் ஒரு நாளாவது ஏற்படும் என்பது வழக்கமாகி வருகிறது. இதுபோன்று திரும்பவும் நிகழாமல் இருக்க என்ன செய்வது? இதுபோன்ற நிலையைத் தவிர்த்து நம் கணணியைப் பேணிப் பராமரிக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கலாம். கணணிகளை சீரான இடைவெளியில் ஸ்கேன் செ...

இன்றைய திருக்குறள்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. கலைஞர் உரை: எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவம் என்று கூறப்படும். மு.வ உரை: தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும். சாலமன் பாப்பையா உரை: பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம். Translation: To bear due penitential pains, while no offence He causes others, is the type of 'penitence'. Explanation: The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others.