இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பேருந்து பயணம்

படம்
பேருந்து பயணம் என்பது இவ்வளவு கொடுமையாக கூட இருக்க முடியுமா என்பது சென்னை பேருந்துகளில்  பயணிக்கும் பொழுது உணரலாம் .. பரபரப்பான வாழ்வில் நெரிசல் மிக்க இந்த பயணங்கள் மனிதனை விரக்திநிலைக்கு கொண்டு செல்லும் என்று சொன்னால் கூட அது குறைபடுத்தி கூறுவாதாகவே  இருக்கும் .. நான் அண்ணா பல்கலையில் பயில்பவன் என்பதால் , கிண்டியில் இருந்து பல்கலை கழகத்திற்கு 21G, M49, ஆகிய  பேருந்துகளின்  மூலம் சென்று இறங்கும் பொழுது கசக்கி தூக்கி ஏறிய பட்ட தாளாக  செல்வேன் .. பெரும்பாலான  பயணங்கள் , தோடு கோட்டினை தொட முடியாத கபடி வீரனை போல் , படியை தாண்டி பேருந்துக்குள் செல்ல முடியாமல் படிகட்டோடு முடிந்து விடும் ..இது எல்லாம் கூட தாங்கி கொள்ள கூடிய இன்பங்கள் தான் , அவ்வளவு நெரிசலில் பயணசீட்டு வாங்குவது , சட்ட மன்ற உறுப்பினர் தேர்தலில் நிற்பதற்கு சீட்டு வாங்குவதை  விட கடினமானது .. கடவுளே சிலையில் இருந்து உயிரோடு வந்தாலும் வரலாம் ஆனால் நடத்துனர் தனது நாற்காலியை விட்டு எழுவது என்பது கனவிலும் நடக்காத நிகழ்வு... எப்படியோ ஒருவரிடம் இருந்து ஒருவராக சில்லறையை கடத்த...

தமிழில் இணைய முகவரிகள்:

படம்
இணையத்தில் இன்று ஏராளமான தமிழ் இணையத்தளங்களைக் காணக் கூடியதாக இருக்கிறது. ஏராளமானவர்கள் வலைப் பூக்களை தமிழில் எழுதி வருகிறார்கள்.ஆனால் நாம் குறித்த தளங்களை அடைவதற்கு ஆங்கில முகவரிகளையே பயன்படுத்த வேண்டியிருந்தது ஆனால் இந்த தமிழ் இணைய முகவரிகளின் அறிமுகத்துடன் நாம் இனி முகவரிகளையும் தமிழில் எழுதலாம்.முக்கியமாக உலகத்தில் முதன் முதலாக தமிழில் இணைய முகவரியை எழுதும் வாய்ப்பை இலங்கை பெற்றுள்ளது. இணையத்தில் உள்ள வளங்கள் இணைய முகவரிகள் மூலம் அடையாளப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக www.nic.lk முகவரியைப் பார்க்கும் எவரும் இது இலங்கை அரசுக்குரியது என இலகுவில் சொல்லிவிடலாம். இந்த இணைய முகவரியில் .lK என்பது நாட்டைக் குறிக்கிறது. இவ்வாறு ஏனைய நாடுகளைக் குறிப்பதற்கும் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் பயன்பட்டு வருகின்றன. உதாரணமாக in ஆனது இந்தியாவைக் குறிக்கும். இதே போல் com.org..net... info போன்றவையும் இணைய முகவரியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக:- www.google. com எனும் போது அத ஒரு வர்த்தக நிறுவனத்திற்குரிய இணையத்தளம் என்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம் இந்த நாடுகளைக் குறிக்கும் .lk, .com, .ne...

.புஷ்புஷ்' வண்டி

இ ப்போது உள்ள சூழ்நிலையில் எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல் தட்டுப்பாடு வரலாம் .அந்த மாதிரியான சமயங்களில் மிதிவண்டி போன்ற எரிபொருள் பயன்படுத்தாத வாகனங்கள் முக்கியத்துவம் பெறலாம் . இப்போது உள்ள புதுச்சேரியை , சுதந்திரத்திற்கு முன் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்த காலத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது , அப்போது அவர்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்திய வண்டி விநோதமானது, அது என்னவென்று காண்போம் ...  'புஷ்புஷ்'(push push) என்பது ஒரு விதமான வண்டி.இந்த வண்டிகளில் சில ரிக்க்ஷா போலவும் ,சில பெட்டி வண்டிகள் மாதிரியும் இருக்கும்.மூன்று அல்லது நான்கு சக்கரமுள்ள இவ்வண்டிகளை மிருகங்கள் இழுப்பதில்லை; மனிதர்களே பின்னாலிருந்து தள்ளுவார்கள் . வண்டிகளின் அளவை பொறுத்து இரண்டு முதல் நான்கு பேர் வரை இதில் பயணம் செய்யலாம்.வண்டியில் அமர்ந்திருப்பவர்களில் ஒருவர் சுக்கானைப் பிடித்தக் கொள்ள வேண்டும். சுக்கன் என்பது ஒரு நீளமான இரும்புக் கம்பி.எந்தப் பாக்கம் போக வேண்டுமோ அந்தப் பக்கமாக இந்தச் சுக்கானைத் திருப்ப வேண்டும் . வண்டியின் பின்னாலிருந்து வண்டியைத் தள்ளுகிற மனிதனுக்கு வீதியில் வருபவர்களை தெ...

இதுவா சிறந்த கல்வி ...?

இ ன்றைய கல்வி ஏந்த நிலையில் பயணித்து கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் சமீபத்தில் வெளியான +௨ தேர்வு முடிவுகள் .. முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்கள் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்தவர்கள் , இல்லை அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளியை சேர்ந்தவர்கள் .. இதற்காக அங்கு உள்ள பள்ளிகள் மட்டுமே சிறந்த பள்ளிகள் என்று ஆக போவதில்லை ..இதற்காக அந்த மாவட்டம் பெருமை பட்டுக் கொள்ளலாமே தவிர , ஒரு சாமானியனுக்கு வருத்தம் மட்டுமே மிஞ்சும் .. அதவாது நாமக்கல் , திருசெங்கோடு பகுதிகளை பொறுத்துவரை பள்ளி கல்லூரிகள் மற்ற மாவட்டங்களை  விட அதிக எண்ணிக்கையில் காணப்படும் .. இதற்காக மட்டுமே கல்வி மாவட்டத்தில் சிறந்த மாவட்டம் என்று கருத முடியாது .. அங்கு உள்ள பள்ளிகளின் நிலையே வேறு ..        அதாவது அங்கு உள்ள பள்ளிகளில் கற்பித்தல் செயல்பாடு , என்பது திரும்ப திரும்ப பயிற்சியளித்தல் என்ற நிலையில் இருக்கும் ..   தேர்வை எப்படி அணுகுவது, எப்படி பதில் எழுதுவது, எந்த அளவுக்கு எழுத வேண்டும் என்பதையெல்லாம் மிகச் சரியாகத் திட்டமிட்டு மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து, திரும்பத் திரும்...

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

படம்
  உ லகில் எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க காதல் கதைகள்படித்து உள்ளோம் .. அதை உணர்ந்தும் உள்ளோம் ... அப்படியொரு கதை தான் இது .. அதில் ஒரு விசித்தரமான தகவலும் உள்ளது     பரோ மன்னர்கள் எகிப்து நாட்டை ஆண்டு வந்த காலம் . அம்மன்னர்கள் தங்களுடைய சொந்த சகோதரிகளையோ இல்லை பெற்ற பெண்களையோ தாரமாக ஏற்று உறவு முறையை மிகவும் கொச்சைபடுத்தினார்கள் .யார் -யார் உறவு என்கிற பாகுபாடே இல்லாமல் போய்விட்டது ..      இந்த மாதிரியான ஒரு கேவலமான முறை அழிந்து போக  காதலும் ஒரு காரணமாக அமைந்தது ..   ரோமானியார்கள் ஆட்சிக்குள் நுழைந்த போதுதான் இந்த விதமான மூட பழக்கங்களை அறவே ஒழிக்க மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார்கள் .. ஜூலியஸ் சீசர் என்னும் மாவீரன் விழுந்தது கிளியோபாட்ராவின் புத்திசாலிதனத்திலும் , அபரிவிதமான அழகிலும் தான் ...   இரண்டு உள்நாட்டு போரின் விளைவாக இருவரும் ஒன்று சேர்ந்தனர் . அதில் ஒன்று ரோம் நகரில் இரு பிரிவினர்களுள் ஏற்பட்ட யுத்தம் ஒன்று , மற்றொன்று மிகவும் விசுவாசிகளாக இருந்த எகிப்தியர்களிடையே நட...

ஆக்சிஜணை மட்டும் சுவாசித்து, உணவே இல்லாமல் உயிர்வாழும் பாக்டீரியா.

படம்
டென்மார்க் நாட்டில் உள்ள ஆர்பார்ஸ் பல்கலைகழகத்தில் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஹன்சிராய் என்பவர் விஞ்ஞானியாக இருக்கிறார். அவர் பாக்டீரியாக்கள் பற்றி ஒரு ஆய்வு நடத்தி உள்ளார். வடக்கு பசிப்பிக் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் வாழும் பாக்டீரியாக்கள் பற்றி இந்த ஆய்வு மேற்கொண்டார். அதில் ஒருவகை பாக்டீரியா உணவு எதுவும் உட்கொள்ளாமலேயே உயிர்வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாக்ட்டீரியாக்கள் எட்டுக் கோடியே அறுபது இலட்சம் ஆண்டுகளாக உயிர்வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். உணவுக்கு பதிலாக ஆக்சிஜணை மட்டும் சுவாசித்து இவை உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆக்சிஜன் மூலம் அதற்கு தேவையான சக்தி கிடைக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்த பாக்டீரியா பற்றி மேலும் விரிவான ஆய்வு நடந்து வருவதாக ஹன்சிராய் கூறியுள்ளார். இந்த வகை பாக்டீரியாக்கள் கடல் மட்டத்தில் இருந்து நூறு அடி ஆழத்துக்கு கீழே காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு பிடித்த பாடல் .....

படம்
இளையராஜா இசை பற்றி நான் சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை .. இந்தப் பாட்டை கேட்கும் போதெல்லாம் ஒரு கனவு உலகத்திற்கு போய் வந்தது போல் இருக்கும் . எத்தனை முறை கேட்டாலும் ,, நிச்சயம் என்னை மறந்து எங்கோ போய் வந்தது போல் இருக்கும் .. ராக தேவன் இளையராஜாவின் இசை என் அம்மா அன்பு போன்று என்னை எப்பொழுதும் பரவசபடுத்தும் ......... ரௌதீக கௌளை ராகத்தில் அமைந்த படலை நீங்களே கேட்டுபாருங்கள் , அந்த மாயஜலத்தை உணர்வீர்கள் ........  இந்த ராகத்தின் பரவசத்தை நன்கு உன்ர்ந்ததனால் தான் ஜேம்ஸ் வசந்தனால் " கண்கள் இரண்டால் " என்ற அருமையான பாடலை தர முடிந்ததது ..  இதே பாடல் மக்கள் முன் மேடையில் திரு . பாலமுரளிகிருஷ்ணா அவர்கள்  பாடிய பொழுது .... குரலும் ராகமும் நிச்சயம் யாவரையும்  பரவசபடுத்தும் ..... (ராகங்கள் தாளங்களோடும் ராஜா உன் பேர் சொல்லும் பாரு )

ஜி.டி. நாயுடு (பள்ளிக்கு செல்லாத பல்கலைகழகம் )

படம்
எ தைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை பற்றிய சில வரிகள் .....    இவர்   கோயம்புத்தூர் மாவட்டம் ,   கலங்கல்   கிராமத்தில் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார். வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார்.       இளம் வயதில் ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார். சிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்ட...

யாழ்ப்பாணம் வந்த,அருண் பாண்டியன்

படம்
த மிழகத்தி ல் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், விஜயகாந்தின் தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், யாழ்ப்பாணம் வந்துள்ளது உண்மை. ஆனால், அருண் பாண்டியன் தனிப்பட்ட முறையில் ஒரு மாத சுற்றுலா விசாவில், வந்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஐங்கரன் இன்டர்நேஷனல் தலைவர் கருணாமூர்த்தியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார...

'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்'

படம்
தமிழ்சினிமாவின் 'அழகிய தமிழ் மகன்' யாரென்றால், சட்டென்று கவுதம் மேனனை நோக்கிதான் கை நீளும். அவரே மேனன்? இதென்ன கேணத்தனமான ஒரு விளக்கம் என்கிறீர்கள், அப்படிதானே?எப்பொழுதும்  அவரது படங்களில் தமிழ்தான் ஆட்சி மொழி.. தமிழில் பெயர் வைத்தால்தான் வரிவிலக்கு என்ற சட்டத்திற்கெல்லாம் முன்னாலேயே தனது முதல் படத்திற்கு 'மின்னலே' என்று பெயர் வைத்தவர் அவர். அதில் தொடங்கி தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் 'நீதானே என் பொன் வசந்தம்' மேற்படி படங்கள் ஓடியதும் ஓடாமல் போனதும் வேறு விஷயம். ஆனால் அவரது தமிழ் தலைப்புகளுக்கு ஒரு கவுரமான வணக்கத்தை நாம் தந்தேயாக வேண்டும். இப்போதும் அவர் ஜெய்யை நடிக்க வைத்து தயாரிக்கவிருக்கும் ஒரு படத்திற்கு அழகான தமிழில்தான் பெயர் சூட்டியிருக்கிறார். 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' என்பதுதான் இந்த புதிய படத்தின் பெயர்.                                                                      ...

கால்ல விழுந்திருப்பேன் ! : பாலு மகேந்திரா

படம்
  எ ன்னை பல தருணங்களில் சிந்திக்கவும் நெகிழ வைத்தவர் பாலு மகேந்திரா , இன்றளவும் அலை பேசி பயன்படுத்தாத எளிமையான மனிதர் .நானறிந்த  வரையில் மூன்றாம் பிறை  படத்தின் இறுதிகாட்சி போன்று எந்த  திரைப்படத்திலும் கண்டதில்லை . மற்ற  இயக்குனர்களின் சிறந்த திரைப்படத்தை பாராட்டவும்  தவற  மாட்டார் . அந்த வகையில் சமீபத்தில் திரைக்கு வந்த வழக்கு எண்  பற்றி அவர் பாராட்டிய விதம் நெகிழக் கூடியது ..        சமீபத்தில்  இயக்குநர்கள் சங்கம் சார்பில் 'மாற்று சினிமாவிற்கான கலந்துரையாடல்' என்று வழக்கு எண் 18/9 படம் பற்றி பேசப்பட்டது. விழாவில் தலைமை உரை ஏற்று இயக்குனர் பாலு மகேந்திரா " சமீபத்தில் நான் பார்த்த படங்களில் 'வழக்கு எண்' படம் என்னை ரொம்ப பாதித்தது விட்டது. படம் பாத்து விட்டு பாலாஜிக்கு போன் செய்து பேசினேன். 'நல்ல வேளை.. நீங்கள் இப்போது இங்கு இல்லை, இருந்திருந்தால...

அண்ணா பல்கலை கழகத்தில் ஒரு நாள் .....

மாணவர்கள் பரப்பரப்பாக வகுப்பிற்கு சென்று  கொண்டிருந்தனர் , மாநிலத்தின் உயர்கல்வி துறை அமைச்சரும் ஆளுநரும் , பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றிக் கொண்டிருந்தார்கள் , அப்துல் கலாம் அவர்கள் லேசர் தொழில்நுட்பம் பற்றி மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தக் கொண்டிருந்தார், சிற்றுண்டி விடுதியில் 15 வயதுள்ள சிறுவன் அங்கு மேசையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தான் , வளாகத்தில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளியின் அழகான சிறுவர்கள் அழுக்கு  படிய மணலில் விளையாடிக் கொண்டிருந்தனர் , அண்ணா அங்கே சிலையாக இருந்தார் ...... .

இரயில் பயணங்களில் .......

படம்
தொ டர் வண்டி பயணம் , மற்ற பயணங்களை விட சுவாரசியமானது . அதிலும் முன்பதிவில்லா பொதுப் பிரிவில் பயணம் செய்வது பல அனுபவங்களை( சிரமங்களைகூட தரலாம்  ) தரும் .நான் பெரும்பாலும் பொது பிரிவில் பயணம் செய்பவன் என்பதால் , எனது அனுபவங்களை இந்த இடுகையில் பகிர்ந்து கொள்கிறேன் ..         அதற்கு முன் ஒரு வரலாற்று  செய்தி . இரண்டாவது உலகப் போர் நடைபெற்று  கொண்டிருந்த சமயம் ,இந்திய ரயில்வே கம்பெனிகாரர்கள் ஒரு  அறிவிப்பை வெளியிட்டனர் .'பயணத்திற்கு முன் பயணம் செய்வது அவசியமா என்பதை யோசியுங்கள் .அப்படி பயணம் செய்யும் போது குறைந்த பொருள்களுடன் பயணம் செய்யுங்கள் ' என்று வலியுறுத்தினார்கள் அது மட்டுமல்ல , சில ரயில் பாதைகளை எடுத்தார்கள் , ஓடும் ரயில்களின்...

பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் கார்ட்டூன்: அவமானமா? அங்கீகாரமா?

படம்
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், அரசியல் சட்டம் என்ற நத்தை மீது நின்று கொண்டு அதை சாட்டையால் அடிப்பதைப் போலவும், அதற்குப் பின்னால் நின்று கொண்டிருக்கும் இந்தியாவின் முல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, தன்னிடம் உள்ள சாட்டையால் அம்பேத்கரை அடிப்பதைப் போல  இருப்பதாகவும், மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆர்டி) சார்பில் வெளியிடப்பட்ட 11-ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது . கடந்த 6 ஆண்டுகளாக அந்தக் கார்ட்டூன், பாடத்திட்டத்தில் இருந்தாலும் கூட, தற்போதுதான் அது  விவதாதிற்கு வந்துள்ளது . பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் கார்ட்டூன்: அவமானமா? அங்கீகாரமா? நீங்களே சிந்தியுங்கள் .......