தமிழில் இணைய முகவரிகள்:
இணையத்தில் இன்று ஏராளமான தமிழ் இணையத்தளங்களைக் காணக் கூடியதாக இருக்கிறது. ஏராளமானவர்கள் வலைப் பூக்களை தமிழில் எழுதி வருகிறார்கள்.ஆனால் நாம் குறித்த தளங்களை அடைவதற்கு ஆங்கில முகவரிகளையே பயன்படுத்த வேண்டியிருந்தது
|
ஆனால் இந்த தமிழ் இணைய முகவரிகளின் அறிமுகத்துடன் நாம் இனி முகவரிகளையும் தமிழில் எழுதலாம்.முக்கியமாக உலகத்தில் முதன் முதலாக தமிழில் இணைய முகவரியை எழுதும் வாய்ப்பை இலங்கை பெற்றுள்ளது.
இணையத்தில் உள்ள வளங்கள் இணைய முகவரிகள் மூலம் அடையாளப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக www.nic.lk முகவரியைப் பார்க்கும் எவரும் இது இலங்கை அரசுக்குரியது என இலகுவில் சொல்லிவிடலாம். இந்த இணைய முகவரியில் .lK என்பது நாட்டைக் குறிக்கிறது. இவ்வாறு ஏனைய நாடுகளைக் குறிப்பதற்கும் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் பயன்பட்டு வருகின்றன.
உதாரணமாக in ஆனது இந்தியாவைக் குறிக்கும். இதே போல் com.org..net... info போன்றவையும் இணைய முகவரியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
உதாரணமாக:- www.google. com எனும் போது அத ஒரு வர்த்தக நிறுவனத்திற்குரிய இணையத்தளம் என்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம் இந்த நாடுகளைக் குறிக்கும் .lk, .com, .net, .info, .org போன்றன உயர்நிலை ஆள்களங்களை (top Level Domains) என்று அழைக்கப்படுகின்றன. இந்த உயர் நிலை ஆள்களங்களை ICANN நிறுவனம் நிர்வகித்து வருகிறது. எனவே நாம் புதிதாக ஓர் ஆள்களத்தை உருவாக்க வேண்டுமானால் ICANN நிறுவனத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.
இணையத்தில் நாம் இவ்வாறு இணைய முகவரிகளை இணைய உலாவிகளில் உள்Zடு செய்து குறித்த இணையத்தளங்களைப் பெறலாம் கணனிகள் நாம் இவ்வாறு கொடுக்கும் பெயர்களை விளங்கிக் கொள்வதில்லை.
எனவே நாம் இணைய முகவரிகளைக் கொடுத்தாலும் கணனிகள் அவற்றைக் குறித்த எண் வடிவங்களுக்கு மாற்றி நாம் வேண்டும்.
செயற்பாடுகளைச் செய்யும் ஆனால் மனிதர்களாகிய எமக்கு எண்களை விடப் பெயர்களே ஞாபகம் வைத்திருப்பது சுலபம். ஆகவே மனிதர்களின் பயன்பாட்டை இலகுபடுத்துவதே இந்த இணையத்தின் முகவரிகளின் செயற்பாடுகளாகும்.
இன்று வரை இந்த இணைய முகவரிகள் ஆங்கில எழுத்துக்களாலே எழுதப்பட்டு வருகின்றன. அத்தோடு முக்கியமாக நாம் இணைய முகவரிகளை எழுதும் போது அவற்றைச் சரியாக எழுத வேண்டும். அல்லாவிட்டால் நாம் எதிர்பார்க்கும் இணையத் தளங்களைப் பெற முடியாது போகும்.
எமக்கு நிச்சயமாக ஆங்கில முகவரியை ஞாபகம் வைத்திருப்பதை விட தமிழ் முகவரிகளை ஞாபகம் வைத்திருப்பது இலகு இணைய முகவரிகள் தமிழில் இருக்கும்.போது அவற்றை மழை இல்லாமலும் இணைய உலாவிகளில் உள்Zடு செய்து சரியான பக்கங்களுக்குச் செல்லலாம்.
உதாரணமாக :- www.parliament.lk என்பதை ஞாபகம் வைத்திருப்பதை விட "தளம் பாராளுமன்றம் இலங்கை" என்பதை ஞாபகம் வைத்திருப்பது தமிழர்களாகிய எமக்கு இலகுவாக இருக்கும்.
இவ்வாறு ஆங்கில எழுத்துக்கள் தவிர்ந்த ஏனைய மொழிகளிலான இணைய முகவரிகளை (Imternationalised Domain Names (IDNs) என்று சொல்வார்கள். இது சம்பந்தமான ஆராய்ச்சிகள் அண்மைக் காலங்களாக மிகுந்த முன்னெடுப்புக்களுடன் செய்யப்படுகிறது.
இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளே புழக்கத்தில் இருந்து வருகின்றன. கொழும்பு போன்ற நகர்சார் பகுதிகளைத் தவிர ஏனைய பிரதேசங்களில் ஆங்கில அறிவு அவ்வளவு சிறப்பான மட்டத்தில் இல்லை என்பதே உண்மை. முக்கியமாக கிராமங்கள் மற்றும் பின்தங்கிய இடங்களில் ஆங்கில அறிவு இன்னமும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது.
கணனியைப் பொறுத்தவரை ஊடாட்ட மொழி ஆங்கிலமாகவே இருந்துவருகிறது. இதனால் ஆங்கில அறிவு குறைந்தவர்கள் கணனியைப் பயன்படுத்தத் தயங்கலாம்.
இந்நிலையில் இலங்கையில் அண்மைக் காலங்களில் உள்ளூர் மொழிக்கு கணனியை மாற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இயக்குதளங்கள் மற்றும் பல்வேறு அன்றாடம் பயன்படுத்தும் மென்பொருள்கள் இன்று தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கிடைக்கின்றன.
அது மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் சிங்கள எழுத்துக்களை எந்த அடிப்படையிலே தட்டச்சு செய்ய வேண்டும் தட்டச்சு செய்யும் விசைப்பலகையின் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பவற்றிற்கான நியமங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதுடன் அவை பரவலாகப் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. (SLS 1134| 2004. SLS 1326: 2008)
இந்நிலையில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் lk ஆள்கள பதிவகம். இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (யிவிஹிதி) அரச மொழியியல் திணைக்களம் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப அமைச்சு, பல்கலைக்கழகங்கள் இணைய சேவை வழங்குனர்கள்.
இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு போன்றன இணைந்து இணயை முகவரிகளைத் தமிழ் மற்றும் சிங்களத்தில் கொண்டு வருவதற்கான செயற்பாட்டை ஆரம்பித்தன.
முன்னர் குறிப்பிட்டது போன்று இணையத்தில் .lk என்ற ஒரு முகவரி இருக்கும் பட்சத்தில் குறித்த முகவரி இலங்கை தொடர்பானதொரு இணையத்தளம் என்பதை அறிந்து கொள்ளலாம். இவ்வகையில் இணையத்தில் இலங்கையின் அடையாளம் .lk என்றே இருந்து வந்தது.
பல ஆய்வுகளுக்கு பின்னர் .lk என்பதற்கு பதிலாக "இலங்கை" என்று தமிழிலும் "லங்கா" என்று சிங்களத்திலும் பயன்படுத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. .lkபோன்று "இலங்கை" மற்றும் "லங்கா" போன்றனவும் உயர் நிலை ஆள்களப் பெயர்கள் என்பதால் அதற்கு ICANN நிறுவனத்தின் அனுமதியை பெற வேண்டி இருந்தது.
ICANN நிறுவனம் நிபுணர்களைக் கொண்டு "இலங்கை" மற்றும் "லங்கா" போன்றன மிகப் பொருத்தமான பெயர்களா? இந்த பெயர்களால் ஏதாவது தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்படுமா போன்ற விடயங்களை எல்லாம் ஆராய்ந்து இலங்கை மற்றும் லங்கா போன்றன சரியான தெரிவுகளே என்பதை அண்மையில் ஏற்றுக் கொண்டது.
இதன் பின்னர் இலங்கையில் இந்த தமிழ் மற்றும் சிங்கள ஆள்தள பெயர்களை பயன்படுத்தப்படுவதற்கான கட்டமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இந் நிலையில் 2010 ஜுன் மாதம் 28 இல் .lk ஆள்கள பதிவகம் தமிழ் மற்றும் சிங்கள இணைய முகவரிகளை வழங்க ஆரம்பித்திருக்கிறது.
இந்த ஆரம்ப நிகழ்வு குறித்த தினத்தில் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உலக நாடுகள் பலவற்றிலிருந்து இத்துறைசார் நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர்..lk ஆள்கள பதிவகத்தின் கொள்கையின் அடிப்படையில் தற்பொழுது.lk ஆள்கள பதிவு செய்திருக்கும். எவரும் இலவசமாக தமிழ் மற்றும் சிங்கள இணைய முகவரிகளை பெறலாம். உதாரணமாக ஏற்கனவே www.gov.lk ஆகிய தளத்தை சிங்கள மற்றும் தமிழ் இணைய முகவரிகளோடு தளம். அரசு. இலங்கை என அடையலாம்
|
கருத்துகள்