ஆக்சிஜணை மட்டும் சுவாசித்து, உணவே இல்லாமல் உயிர்வாழும் பாக்டீரியா.
டென்மார்க் நாட்டில் உள்ள ஆர்பார்ஸ் பல்கலைகழகத்தில் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஹன்சிராய் என்பவர் விஞ்ஞானியாக இருக்கிறார். அவர் பாக்டீரியாக்கள் பற்றி ஒரு ஆய்வு நடத்தி உள்ளார். வடக்கு பசிப்பிக் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் வாழும் பாக்டீரியாக்கள் பற்றி இந்த ஆய்வு மேற்கொண்டார். அதில் ஒருவகை பாக்டீரியா உணவு எதுவும் உட்கொள்ளாமலேயே உயிர்வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாக்ட்டீரியாக்கள் எட்டுக் கோடியே அறுபது இலட்சம் ஆண்டுகளாக உயிர்வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். உணவுக்கு பதிலாக ஆக்சிஜணை மட்டும் சுவாசித்து இவை உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆக்சிஜன் மூலம் அதற்கு தேவையான சக்தி கிடைக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்த பாக்டீரியா பற்றி மேலும் விரிவான ஆய்வு நடந்து வருவதாக ஹன்சிராய் கூறியுள்ளார். இந்த வகை பாக்டீரியாக்கள் கடல் மட்டத்தில் இருந்து நூறு அடி ஆழத்துக்கு கீழே காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.