நான் முதன் முதலாக " நேதாஜி" பற்றி எழுதியதும் வீரன் "பகத் சிங்" பற்றயும் எழுத வேண்டும் என தோன்றியது ....... க டுமையான போராளி .தீவிர காலனியாதிக்க எதிர்ப்பாளர். விடுதலை வேட்கை கொண்ட புரட்சியாளர். வன்முறையில் அசாத்திய நம்பிக்கை கொண்டவர் .கொலை ,கொள்ளை, குண்டு வெடிப்பு என்று அவர் புரிந்த அத்தனை செயல்களும் பதைப்பதைக்கச் செய்தவை ;கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானவை.அடிப்படையில் சுதந்திர தாகம் அவருக்கு இருந்தது .காந்திக்கு அது ஒரு பாதையை காட்டியது போல் பகத் சிங்க்கு வேறொரு பாதையை காட்டியது . மிகவும் குறுகிய வாழ்க்கை காலம் அவருடையது .ஆனால் நூற்ற்றண்டுகளைக் கடந்து நிற்கக்கூடிய வலிமையான படங்களைச்சுமந்து நிற்கும் வாழ்க்கை .சரித்திரத்தின் ஓட்டத்தோடு அடித்துச் செல்லப்படாமல் சரித்திரத்தையே திருத்தி எழுதிய சூறாவளி வாழ்க்கை .அவரது முறுக்கு மீசை போலவே கம்பீரத்துடனும் துடிதுடிப்புடனும் இருந்தது அவர் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும் . முதலளிதுவதுக்கு எதிராக ,ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ,அடக்கு முறைக்கு எதிராக பகத் சிங் நிகழ்த்திய யுத்தம் ,அசாத்தியமானது ,அபாரமானது . துப்...