இடுகைகள்

ஆசிரியர் பணிக்கு இலக்கணம் "பாரதிதாசன்"

படம்
எ ல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதாக வையத்தை நோக்கி மக்களை இட்டுச் செல்லும் பெரும் பொறுப்பினை ஏற்று, தமிழ்க் கவிதைப் பணி ஆற்றிவந்த புரட்சிக்கவிஞர் அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளிலே இந்தக் கருத்துகளின் கூறுகள் எங்கும் காணப்படும். பாரதிதாசனார் என்ன எழுதினாரோ அதன்படி நடக்கிறாரா என்று கூர்ந்து நோக்கும் கண்கள் ஓராயிரம் உண்டு என்பது அவருக்குத் தெரிந்ததுதான்!  அவர் சொன்ன கருத்துகளை ஏற்றுக் கொள்ளாதவர்களும், எதிர்த்தவர்களும் அவரை வேட்டை நாய்கள் போல் கவனித்து வந்தார்கள். இதனைப்பற்றித் துளிக் கவலையும் பாரதிதாசனாருக்கு இருந்ததில்லை. இழிவு ஒன்று காணில் அதன் சல்லிவேரையும் கூடக் கல்லி எறிவதில் ஏற்படும் இன்னல் எதுவாயினும் ஏற்பதும், இன்னுயிர் போவதானாலும், தாம் கொண்ட கொள்கையில் இம்மிபிறழாமல் வாழ்வதும் அவருள் ஊறிப்போன பழக்கம்! மாணவப்பருவம் தொடங்கி, தம் மூச்சு முடியும்வரையில் இதையே புரட்சிக்கவிஞர் நிலைநாட்டிக் கொண்டிருந்தார். புரட்சிக்கவிஞர் தமிழாசிரியராய் வேலை-பார்த்தகாலை, புதுவை, பிரஞ்சிந்தியா என்ற தனியாட்சியில் இருந்ததல்லவா! அக்காலத்தில் தமிழ்ப் பாடநூல் புதுவைக்கென எதுவும் இல்லை. அன்...

திருப்பூர் தற்கொலை நகரமா?

படம்
               தமிழ்நாட்டில் உள்ள  தொழில் நகரங்களில் முக்கியமான தொழில் நகரம் திருப்பூர் . எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும் நகரம் . நான் கல்லூரி படிக்கும் காலங்களில் , திருப்பூரில் பைக் ஓட்டுவது மிகவும் சாவலான விஷயம்(    மூன்று ஆண்டுகள் என் கல்லூரி காலங்கள் திருப்பூரில் தான் கழிந்தது) .அந்த அளவிற்கு சாலைகளில் போக்குவரத்து அதிகமாக காணப்படும்.இன்றும் திருப்பூர் சென்றால் , பனியன் மூட்டைகளை பைக்கில் வைத்து , எவ்வளவு சிறிய குறுகலான சாலையிலும் , அலட்டிக்காமல் ஓட்டி  செல்லும் மனிதர்களை பார்க்காமல் இருக்கமுடியாது. திருப்பூர் நகரில் பனியன் கம்பெனிகள் இல்லாத தெருக்களே கிடையாது. ஒரே சிறிய அறையில் இயங்ககூடிய கம்பெனியிலிருந்து பெரிய அடுக்குமாடி கட்டடித்தில் இயங்ககூடிய கம்பெனிகள் வரை ஏரளாமான கம்பெனிகள்  உள்ளன . தென் தமிழக மக்களுக்கு வாழ்க்கை கொடுத்து காப்பாற்றி கொண்டிருக்கும் மாநகரம் .ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்து வரும் திருப்பூர், கடந்த 20 ஆண்டுகளில் வியக்கத்தகுந்த தொழில் வளர்ச்சியை எட்ட...

காகிதப்புலிகளை உருவாக்கும் கல்வி

 எப்படியோ , சமச்சீர் கல்வி பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்து பள்ளிகளிலும் கற்றல் - கற்பித்தல் நிகழ்வு  திறம்பட நடந்து கொண்டிருக்கிறது .இதில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியோ இல்லையோ , பெற்றவர்களுக்கு தான் பெரும் நிம்மிதி .அதிலும் குறிப்பாக பொதுத்தேர்வு எழுதப் போகும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர், இரண்டு மாதங்களாக என்ன செய்வதென்று தெரியாத நிலையில், சொல்லொணாக் கவலையில் ஆழ்ந்திருந்தனர். அரசியல் விருப்பு வெறுப்பு மாணவர்களின் படிப்பு உரிமையில் தலையிடக் கூடாதென்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள கருத்து, அனைவராலும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.                     தீர்ப்பு வருவதற்கு இடைப்பட்ட காலத்தில் , பள்ளிகள் வினோதமான முறையில் இயங்கின . எங்கள் ஊரில் (தேங்காய் என்னை தயாரிக்கும்  )தொழிற்சாலைகள் அதிகம் என்பதால் அங்கும் , குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலை ( பொடாரன் கம்பெனி ), வங்கிகள் ,  தபால்  நிலையம் , எல்.ஐ.சி ஆகிய  இடங்களுக்கு அழைத்துச் சென்று பணம் செலுத்தும்   விதம் , தொழிற்சாலை இயங்கும் மு...

இந்திய அரசு ஆதரவு - கோத்பய ராஜபக்ச சாட்சியம்

படம்
இந்த செய்தி நாம் ஏற்கனவே அறிந்த செய்திதான் . இருந்தாலும் இந்தக் கட்டுரையை படிப்பதன் மூலம் உண்மை உள்ளங்கை நெல்லிக் கனியாய் விளங்கும் . இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இருந்த நெருக்கமான ஒத்துழைப்பின் மூலமே நாட்டில் இருந்து தீவிரவாதத்தை முற்றாக அழிக்க முடிந்தது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மிக் விமானக்கொள்வனவு ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட சண்டேலீடர் நிறுவனத்துக்கு எதிராக, 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கல்கிசை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆகஸ்ட் 16 ஆம் தேதி  இந்த வழக்கில் சுமார் 2 மணி நேரம் கோத்தாபய ராஜபக்ச சாட்சியமளித்திருந்தார். அவர் தனது சாட்சியத்தில், சிறிலங்காவில் போரின் போது என்ன நடக்கிறது என்பது பற்றி தகவல்களை இந்திய அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக வழங்கி வந்தாகவும் கூறியுள்ளார். 1980களில் வடமராட்சியை கைப்பற்றும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு இந்தியாவுடனான தவறான புரிதல்களை காரணம் என்று கூறிய அவர், அப்போது இந்தியா தலையிட்டிருக்காது போயிருந்தால் 25 ஆண்டுகளுக்க...

நாளை சென்னை தினம்

படம்
    கெட்டும் பட்டணம் போய் சேர்  என்று ஒரு பழமொழி உண்டு .ஆனால் , எத்தனையோ உள்ளங்கள் வாழ்வதற்காக தமிழகம் மட்டுமின்றி , இந்தியாவின்  பல மாநிலங்களில் இருந்தும்  சென்னையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர் . இந்திய வரலாற்றில் மதராசப்பட்டினத்துக்கு பெரும்  பங்கு உண்டு. காலச் சக்கரத்தில்  பல முக்கிய நிகழ்வுகள் தடம் பதித்த  சென்னையை பெருமை  படுத்தும் விதமாக , நாளை சென்னை தினம் கொண்டாடப் படுகிறது .     தமிழகத்தின் தலைநகரமாக உள்ள சென்னை, மாநிலத்தில் உள்ள அனைவரையும் கவர்ந்த ஒரு மாநகராக காட்சி அளிக்கிறது. தமிழகத்தின் மிகப்பெரிய நகரும், சர்வதேச அளவில் பிரபலமான நகராகவும் விளங்கி வருகிறது.  371 ஆண்டுகளுக்கு முன்பு, 1639 ஆக. 22ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த, பிரான்சிஸ் டே மற்றும் அவருடைய மொழி பெயர்ப்பாளரான ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் விஜய நகர அரசின் கீழ் இருந்த வந்தவாசியை ஆண்ட வெங்கடாத்ரி நாயக்கரிடம் (இவருடைய தந்தைதான் தமர்லா சென்னப்ப நாயக்கர்) பேசி, கடற்கரை அருகே இடத்தை வாங்கி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர். ந...

சிறந்த அறிவியல் சாதனைகள்

ஆனந்த விகடனில் எழுத்தாளர் சுஜாதா எழுதிக்கொண்டிருந்த 'கற்றதும் பெற்றதும்' தொடரை நம்மில் பலர் படித்திருப்போம். ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், "இந்த ஆண்டின் சிறந்த . . ." என்றொரு பட்டியலை வெளியிடுவார். "சிறந்த ஸ்வீட்", "சிறந்த காரம்" என்று ஆரம்பித்து, "சிறந்த பாடல்", "சிறந்த புத்தகம்" என்று எங்கெல்லாமோ அந்தப் பட்டியல் நீளும். அதனை நினைவூட்டும் வகையில், அமெரிக்காவின் பிரபல டைம் பத்திரிகையில் சென்ற ஆண்டின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி நிபுணர்கள் எழுதியிருந்தார்கள். அமெரிக்காவில் நடக்கும் ஆராய்ச்சியைப் பற்றி மட்டும் பேசாமல், உலகம் முழுவதைப் பற்றியும் பேசியிருந்தார்கள். அறிவியல் ரீதியில் உலகம் தற்பொழுது எங்கு உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவும் பட்டியல். அதனை  உங்களுக்காக இங்கே பகிர்ந்து கொள்கிறேன் .. 1. Large Haldron Collider ஸ்விட்சர்லாண்ட் - ஃப்ரான்ஸ் நாடுகளின் எல்லைப் பகுதியின், CERN (European Organization for Nuclear Research) நிறுவனம் கட்டிய பிரம்மாண்டமான Particle Acceleratorதான் அது. உல...

பேரறிவாளன் உறவினர்களுக்கு எழுதிய கடிதம்:

படம்
ரா ஜீவ் காந்தி கொலை வழக்கு சூத்திரதாரிகளில் ஒருவர் எனக்கூறி மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் தன் தரப்பு நியாயங்ளை தனது குடும்பத்தினருக்கு ஒரு கடிதமாக எழுதியுள்ளார். கடிதத்தில் தனது மனப்புலம்பல்களையும் தனது பெற்றோர்களுடன் பகிர்ந்தகொண்டுள்ளார்.இந்த கடிதம்  செய்தி.காம் என்ற இணையத்தில் இன்று வெளியிடப்பட்டிருந்தது . உங்களுக்காக இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன் . தூக்குத் தண்டனையை எந்த நேரத்திலும் எதிர் நோக்கியிருக்கும் பேரறிவாளன், சிறையிலிருந்து குடும்பத்தினருக்கு எழுதியுள்ள கடிதம்:- பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே,  வணக்கம்.  நான், அ.ஞா.பேரறிவாளன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவாய் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள் முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப் புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன் என்பதாலும், அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன். தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன் என்பதால் மனித...