காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

 லகில் எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க காதல் கதைகள்படித்து உள்ளோம் .. அதை உணர்ந்தும் உள்ளோம் ... அப்படியொரு கதை தான் இது .. அதில் ஒரு விசித்தரமான தகவலும் உள்ளது 

   பரோ மன்னர்கள் எகிப்து நாட்டை ஆண்டு வந்த காலம் . அம்மன்னர்கள் தங்களுடைய சொந்த சகோதரிகளையோ இல்லை பெற்ற பெண்களையோ தாரமாக ஏற்று உறவு முறையை மிகவும் கொச்சைபடுத்தினார்கள் .யார் -யார் உறவு என்கிற பாகுபாடே இல்லாமல் போய்விட்டது ..
 
   இந்த மாதிரியான ஒரு கேவலமான முறை அழிந்து போக  காதலும் ஒரு காரணமாக அமைந்தது .. 

 ரோமானியார்கள் ஆட்சிக்குள் நுழைந்த போதுதான் இந்த விதமான மூட பழக்கங்களை அறவே ஒழிக்க மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார்கள் .. ஜூலியஸ் சீசர் என்னும் மாவீரன் விழுந்தது கிளியோபாட்ராவின் புத்திசாலிதனத்திலும் , அபரிவிதமான அழகிலும் தான் ... 
 இரண்டு உள்நாட்டு போரின் விளைவாக இருவரும் ஒன்று சேர்ந்தனர் . அதில் ஒன்று ரோம் நகரில் இரு பிரிவினர்களுள் ஏற்பட்ட யுத்தம் ஒன்று , மற்றொன்று மிகவும் விசுவாசிகளாக இருந்த எகிப்தியர்களிடையே நடந்த போர் .. 
             முதல்போரில் சீசர் தனது எதிரி பாம்பேயை எகிப்து வரை துரத்திக் கொண்டு போனான் .ஆனால் அங்கே இருந்த எகிப்தியர்கள் பாம்பேயை கொன்று சீசரை திருப்திபடுத்தினார்கள் ,இதை கவனித்த சீசர் எகிப்து நாட்டில் கால் பதித்தால் நல்லது என்று நினைத்தான். எகிப்தின் தானிய கிடங்குகள் ரோம் நகர மக்களின் பசியை தீர்க்க உதவின .இந்த உதவியை ஏந்த விதத்திலும் சீசர் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை ... 
      கிளியோபாட்ராவின் ஆட்சியை அவளுடைய மூத்த சகோதரன் பிடோலேமி கைப்பற்றிக் கொண்டான் .இருவரும் ஆட்சியை பங்கு போட்டு நடத்த வேண்டும் என்பது அவரது தந்தையின் கட்டளை ஆனால் அதை மகன் கேட்க வேண்டுமே ..அதனால் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது ..இது சீசரை கிளியோபாட்ரா சந்திக்க வாய்ப்பாக அமைந்தது ... 
    ஆனால் கிளியோபாட்ராவால் அவ்வளவு  எளிதில் சீசரை சந்திக்க முடியவில்லை ..அதனால் அவனது காவலர்களை ஏமாற்ற தரைவிரிப்பால் சுருட்டப்பட்டு சீசர் முன் உருண்டு போய் விழுந்தாள்.
கிளியோபாட்ரா, சீசர் முன் விழுந்த காட்சி 

.( இவ்வாறு தான் அவர்களது முதல் சந்திப்பு நிகழ்ந்ததாக சீசரின் தோழன் புலிடார்ச் சொன்னதாக தகவல் ) அவன் முன்பு போய் நின்ற அவளுக்கு சீசரை தான் பக்கம் வளைக்க அதிக சிரமபடவே இல்லை. எந்தவித நிபந்தனையும் இல்லாமல் எகிப்து தேசத்து மகுடத்தை அவளுக்கு பெற்று   தருவதாக வாக்களித்தான் .. அது சாத்தியம் என்பதை கிளியோபாட்ராவும் உறுதியாக நம்பினாள்..அதுவும் நடந்தது .. போரில் கிளியோபாட்ராவின் சகோதரனை வீழ்த்தி நாட்டை கைப்பற்றி சீசர் தனது வாக்கை நிறைவேற்றினான் . இது எல்லாமே நிகழ வேறென்ன , அவன் வைத்திருந்த காதல் தான் காரணம் ... அதன் பின்பு அவர்களது உறவு உயர்ந்த நிலையை அடைந்திருந்தது .. 

 சீசருக்கு அவள் மீது பிடிப்பான காதல் இருந்தது , அதை விடவும் அவனுக்கு மனமில்லை .. அவளும் அவனை நேசித்தாள்.  ஆனால் தங்கள் நாட்டு அரசி வேற்று  தேசத்து ஒருவனுடன் நெருக்கமாக இருப்பதை மக்கள் விரும்ப வில்லை .. அது மட்டுமின்றி , மீண்டும் உள்நாட்டு போரால் கிளியோபாட்ராவுக்கு நெருக்கடி ஏற்படாது என்பது எனன நிச்சயம் .. ஆனால் சீசரால் அவளை எளிதாக அவளை மணக்கவும் முடியாது ,, ஏனென்றால்  அந்த நாட்டில் தான் முன்பு கூறியது போல் கேவலமான கல்யாண முறை இருக்கிறதே.. சீசரும் அதற்கேற்றார் போல் ஒரு திட்டம் போட்டு அதையும் வெற்றிகரமாக நிகழ்த்தியும் விட்டான். 

     கிளியோபாட்ராவுக்கு ஒரு இளைய தம்பி இருந்தான் . அவன் பிடலோமிXIV வயது 12.. அவனை அவளுக்கு மணமுடித்து வைத்தான் . ஆனால் இவர்கள் உறவு தொடர்ந்து வந்தது .. அதன் மூலம் சீசரியன் என்று மகன் இருந்தான் .. 

        காதல் மனிதனை எனன வேண்டுமானுலும் செய்யும் என்பதற்கு இது  ஒரு உதாரணம் ..  பிறகு சீசர் தனது நண்பன் புருடசினால் கொல்லப்பட்ட பின்பு ,, பேரழகி கிளியோபட்ரா கொடூரமாக கொல்லபட்டாள்.. அதற்கும் காதல் தான் காரணம் .. அது அடால்ப் மார்கோனி கிளியோபாட்ரா மீது வைத்திருந்த காதல் தான் ....தான் காதலி வேறொருவன் கூட வாழ்வதை யார்தான் ஏற்று கொள்வார்கள் ..இப்படி காதல் வரலாற்றில் மட்டுமில்லாது நிகழ் காலங்களிலும் பல அற்புதங்களையும்  ,  கோமாளிதனங்களையும் ,கொடூரங்களையும் நிகழ்த்தி வந்தே கொண்டிருக்கிறது.... மனிதன் மனம் ஒரு வினோதமான பட்டறை .. அதில் காதல் வரும் பொழுது எல்லாம் அங்கு இருந்து எத்தனையோ விதமான நிகழ்வுகள் படைக்கபடலாம்.. அதே சமயத்தில் அந்த மனமே மரணிக்கவும் செய்யலாம் ... எத்தனையோ வேதி வினைகளை எளிதில் புரிந்த கொண்ட எனக்கு இந்தமாதிரியான இதயங்களினால் நிகழ்த்தப்படும் வினைகளை புரிந்து கொள்ள முடியவில்லை ...  சரி சரி மீண்டும் வரலாற்றிற்கே வருவோம் ... கிளியோபாட்ரா கொல்லப்பட்ட பொழுது அவளோடு சேர்த்து , அவளது நான்கு வயது மகன் . . அவளது இளவயது கணவன்  அனைவரும் கொல்லப்பட்டனர் .. பிறகு அவர்களது கேவலமான திருமண முறையும் ஒழிக்கப்பட்டது ...................... 
 
        So moral of the story என்னனா .. காதல் அனைவரையும் மாற்றும்.. எந்த ஒரு வாழ்வியல் மாற்றத்தையும் ஏற்படுத்தும் .. வாழவும் வைக்கும் , வீழவும் வைக்கும் .......... 

கருத்துகள்

ANBUTHIL இவ்வாறு கூறியுள்ளார்…
thanks for sharing this story

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது