அதிவேக வாழ்க்கை......

வாழ்க்கை எப்பிடி போகுதுங்க ? நல்ல இருக்கீங்களா ? போன்ற பண்பாடு சார்ந்த நலம் விசாரிப்புகளின் போது  அனேக மனிதர்களிடமிருந்து  வரும்  பதில்கள் வெறுமை என்னும் புகையை கக்கியபடியே வந்து விழுகின்றன. இப்போதெலாம் நமது வாழ்க்கை பெரும்பாலான நேரங்கள் அவசர கதியிலியே நிகழ்கிறது ... ஏன் இவ்வளவு அதிர்வெண் வேகத்தில் அதிர்ந்து இயங்கி கொண்டு இருக்கிறோம் எண்டு யோசிக்ககூட நேரம் இல்லாமல் வாழ்க்கை போகிற போக்கில் கூட இல்லாமல் அதன் வேகத்தை முந்திக் கொண்டு சென்று கொண்டிருக்கிறோம் . பெரும்பாலான மக்கள் வருங்கால திட்டங்களை வைத்துக் கொண்டு அதற்கு தயாராகும் பொருட்டு சுழன்றுக் கொண்டிருக்கின்றனர் ..... ஆனால் இறுதிவரை தாங்கள் நினைத்தது போல் ஒரு வாழ்க்கையை வாழ முடியாமலே மடிகின்றனர் .. நம் முன்னோர்கள் வாழ்ந்தது போல் அமைதியான ஆர்பாட்டம் இல்லாத வாழ்க்கையை நம்மால்  வாழ முடிவதில்லை. ..... 

       ஒவ்வொரு மனிதனுக்கும்  அழகான தருணங்கள் அடிக்கடி நாம் சந்திக்கின்ற பாதை திருப்பங்களை போல் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன .. ஆனால் நம் மனம் திருப்பங்களே இல்லாத புறவழி சாலையையே நாடி செல்கிறது ... அழாகான காலை , அலுவலகம் முடித்து வீடு திரும்பும் மாலை , நாம் பயணிக்கின்ற சாலை முதலிய சமயங்களில் பரபரப்புக்கும் படபடப்புக்கும் பஞ்சம் வராமல் பார்த்துக் கொள்கிறோம். உடல் வளர்ச்சிக்கு ஆதாரமான உணவு கூட நீராவி இஞ்சினுக்குள் தள்ளபடுகின்ற எரிபொருளைப் போல் ஒரு வித அவசரத்துடனே தள்ள வேண்டியிருக்கிறது ... மாலை நேரங்களில் மாநகர பேருந்துகள் , மின்சார ரயிலில் பயணிக்கும் மக்களை பார்க்கும் பொழுதும் அவர்களுது உரையாடல்களை கேட்கும் பொழுது வாழ்க்கை இவளவு எரிச்சல் நிறைந்ததா? என்று எண்ணத்  தோன்றுகிறது ...

       இனிய நேரங்களில் இன்புற்றிருப்பதை மறுக்கிறோம்,.. அன்பானவர்களோடு உரையாட மறக்கிறோம் ... குழந்தைகளிடத்தில் பேச , மழலை மொழி கேட்பதை தவிர்க்கிறோம்.... முன்பு இருந்ததை விட இப்போதெல்லாம் வீடுகளில் உரையாடல்களுக்கான் நேரத்தை வெகுவாக குறைத்து விட்டோம் ... இன்னும் தெளிவாக செப்பினால் , சுய நினைவு என்பதே எப்போதுமே அணைத்து வைக்கப்பட்ட நிலையில் இருப்பதையே  விரும்புகிறோம். மேற்சொன்ன அத்துணை விவரங்களுக்கும் ஒரே காரணம் வசதி , ஆடம்பரம் , கௌரவம் என்னும் பொய்யான அடையாளங்களுக்காக பணம் என்கிற அச்சிடப்பட்ட தாள்களை தேடி வாழ்வைத் தொலைக்கிறோம் .அழுகின்ற குழந்தை ஒரு கட்டத்தில் எதற்காக அழுகிறது என்பதி மறந்து விடுவதைப்போல , ஒரு கட்டத்தில் நாமும் எதற்காக ஓடுகின்றோம் என்பதை மறந்து மடிந்து விடுவோம்.
            இப்படிப்பட்ட அவசரகதி வாழ்வை தான் நம் முன்னோர்கள் விட்டு சென்றனரா? இதை விட வேகமான நாட்களையா நம் வழிதோன்றல்களுக்கு விட்டு செல்லபோகிறோம் . நமது இலக்கியங்கள் மூலம் கற்றுணர்ந்தவை  இவைகள்தானா ? யோசியுங்கள் ,  நிதானித்து அமைதியான் ஆர்பாட்டம் இல்லாத வாழ்வை அமைப்போமாக!       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது