இடுகைகள்

அக்டோபர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதிவேக வாழ்க்கை......

படம்
வாழ்க்கை எப்பிடி போகுதுங்க ? நல்ல இருக்கீங்களா ? போன்ற பண்பாடு சார்ந்த நலம் விசாரிப்புகளின் போது  அனேக மனிதர்களிடமிருந்து  வரும்  பதில்கள் வெறுமை என்னும் புகையை கக்கியபடியே வந்து விழுகின்றன. இப்போதெலாம் நமது வாழ்க்கை பெரும்பாலான நேரங்கள் அவசர கதியிலியே நிகழ்கிறது ... ஏன் இவ்வளவு அதிர்வெண் வேகத்தில் அதிர்ந்து இயங்கி கொண்டு இருக்கிறோம் எண்டு யோசிக்ககூட நேரம் இல்லாமல் வாழ்க்கை போகிற போக்கில் கூட இல்லாமல் அதன் வேகத்தை முந்திக் கொண்டு சென்று கொண்டிருக்கிறோம் . பெரும்பாலான மக்கள் வருங்கால திட்டங்களை வைத்துக் கொண்டு அதற்கு தயாராகும் பொருட்டு சுழன்றுக் கொண்டிருக்கின்றனர் ..... ஆனால் இறுதிவரை தாங்கள் நினைத்தது போல் ஒரு வாழ்க்கையை வாழ முடியாமலே மடிகின்றனர் .. நம் முன்னோர்கள் வாழ்ந்தது போல் அமைதியான ஆர்பாட்டம் இல்லாத வாழ்க்கையை நம்மால்  வாழ முடிவதில்லை. .....         ஒவ்வொரு மனிதனுக்கும்  அழகான தருணங்கள் அடிக்கடி நாம் சந்திக்கின்ற பாதை திருப்பங்களை போல் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன .. ஆனால் நம் மனம் திருப்பங்களே இல்லாத புறவழி சாலை...