சாதிப்பது காதலில்லை.. சிந்திப்பதும் கூட.
இன்று தொலைக்காட்சியில் எந்த ஒரு சேனலை திருப்பினாலும் வரும் செய்தி "காதல் மனைவி திவ்யா பிரிந்த விரக்தியில் இளவரசன் ரயில் பாதையில் சடலமாக கிடந்தார்". ஏழு மாதங்களுக்கு முன்பு இவர்களின் காதல் கல்யாணத்தால் திவ்யாவின் குடும்பமே நிலைகுலைந்து போனது . திவ்யாவை கனவுகளோடு வளர்த்த அவளது தந்தை அந்த துக்கம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டார் எனவும் தர்மபுரியே ஜாதி கலவரத்தால் தத்தளிததும் யாவரும் அறிந்ததே. அப்போதும் திவ்யா தனது காதல் வாழ்கையே முக்கியம் என இளவரசனோடு அடைக்கலம் புகுந்து விட்டாள்.
ஏழு மாதங்கள் கடந்து போன வாரம் தனது அம்மாவோடு இருக்க போவதாகவும் அவர் பாவம் தனியாக இருக்கிறார் எனவும் கூறி அம்மாவுடன் சென்று விட்டாள் .அனால் பாவப்பட்ட இளவரசன் இன்று தண்டவாளத்தில் பிணமாக கிடக்கிறான் . அது தற்கொலையா அல்லது கொலையா என கூட தெரியவில்லை. இதை அலசி ஆராய்வதால் போன இளவரசனின் உயிரோ திவ்யாவின் தந்தை உயிரோ மீண்டும் வர போவதில்லை. இது தமிழகத்தில் உள்ள எல்லா இளவயதினருக்கும் ஏதோ ஒன்றை தெரிவிக்கிறது. நாம் விரும்பியவரையே கை பிடித்து அவருடனே சென்று வாழ இது ஒன்றும் வெளிநாடு கிடையாது. இது தமிழகம்.கலாச்சாரத்தை பின்பற்றுவது.ஜாதியால் பிணைக்கப்பட்ட சமூகம். காதலுக்கு கண் இல்லை.. உண்மைதான். அனால் தமிழக காதலுக்கு குடும்ப சூழ்நிலை குடும்ப பின்னணி எல்லாமே உள்ளது.காதல் தவறில்லை ஆனால் காதலிக்கும் போது அந்த காதல் நம்மை பெற்றவர்களை கஷ்ட படுத்த கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெற்றோர்களை எதிர்த்து ஒரு போதும் மனநிறைவோடு சந்தோசம்மாக வாழ்ந்து விட முடியாது.காதல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பெற்றோரின் மரியாதையை, நிம்மதியை கெடுபதற்கு பதிலாக பசி,தூக்கம், அவசிய தேவைகள் எல்லாவற்றையும் விட்டு கொடுத்து நம்மை ஆளாக்கிய பெற்றோர்களுக்காக காதலை விட்டு கொடுப்பது ஒன்றும் தவறில்லை. இது கஷ்டமாக இருக்கலாம் காதலின் விதியே கூட மாறியது போல இருக்கலாம். ஆனால் பெற்றோர்களை எதிர்த்து கல்யாணம் செய்து நாம் பெற்ற பிள்ளைகள் உறவுக்காக ஏங்குவதை விட விட்டு கொடுத்தால் பெற்றோரை மகிழ்வாக பார்த்து கொள்ள முடியும். ஆகையால் எந்த ஒரு செயல் செய்யும் முன்பும் யோசித்து முடிவெடுக்க வேண்டும் காதல் கூட.
கருத்துகள்