சாதிப்பது காதலில்லை.. சிந்திப்பதும் கூட.
இன்று தொலைக்காட்சியில் எந்த ஒரு சேனலை திருப்பினாலும் வரும் செய்தி "காதல் மனைவி திவ்யா பிரிந்த விரக்தியில் இளவரசன் ரயில் பாதையில் சடலமாக கிடந்தார்". ஏழு மாதங்களுக்கு முன்பு இவர்களின் காதல் கல்யாணத்தால் திவ்யாவின் குடும்பமே நிலைகுலைந்து போனது . திவ்யாவை கனவுகளோடு வளர்த்த அவளது தந்தை அந்த துக்கம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டார் எனவும் தர்மபுரியே ஜாதி கலவரத்தால் தத்தளிததும் யாவரும் அறிந்ததே. அப்போதும் திவ்யா தனது காதல் வாழ்கையே முக்கியம் என இளவரசனோடு அடைக்கலம் புகுந்து விட்டாள். ஏழு மாதங்கள் கடந்து போன வாரம் தனது அம்மாவோடு இருக்க போவதாகவும் அவர் பாவம் தனியாக இருக்கிறார் எனவும் கூறி அம்மாவுடன் சென்று விட்டாள் .அனால் பாவப்பட்ட இளவரசன் இன்று தண்டவாளத்தில் பிணமாக கிடக்கிறான் . அது தற்கொலையா அல்லது கொலையா என கூட தெரியவில்லை. இதை அலசி ஆராய்வதால் போன இளவரசனின் உயிரோ திவ்யாவின் தந்தை உயிரோ மீண்டும் வர போவதில்லை. இது தமிழகத்தில் உள்ள எல்லா இளவயதினருக்கும் ஏதோ ஒன்றை தெரிவிக்கிறது. நாம் விரும்பியவரையே கை பிடித்து அவருடனே சென்று வாழ இது ஒன்றும் வெளிநாடு கிடையாது. இது ...