இடுகைகள்

ஆகஸ்ட், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பேருந்து பயணம்

படம்
பேருந்து பயணம் என்பது இவ்வளவு கொடுமையாக கூட இருக்க முடியுமா என்பது சென்னை பேருந்துகளில்  பயணிக்கும் பொழுது உணரலாம் .. பரபரப்பான வாழ்வில் நெரிசல் மிக்க இந்த பயணங்கள் மனிதனை விரக்திநிலைக்கு கொண்டு செல்லும் என்று சொன்னால் கூட அது குறைபடுத்தி கூறுவாதாகவே  இருக்கும் .. நான் அண்ணா பல்கலையில் பயில்பவன் என்பதால் , கிண்டியில் இருந்து பல்கலை கழகத்திற்கு 21G, M49, ஆகிய  பேருந்துகளின்  மூலம் சென்று இறங்கும் பொழுது கசக்கி தூக்கி ஏறிய பட்ட தாளாக  செல்வேன் .. பெரும்பாலான  பயணங்கள் , தோடு கோட்டினை தொட முடியாத கபடி வீரனை போல் , படியை தாண்டி பேருந்துக்குள் செல்ல முடியாமல் படிகட்டோடு முடிந்து விடும் ..இது எல்லாம் கூட தாங்கி கொள்ள கூடிய இன்பங்கள் தான் , அவ்வளவு நெரிசலில் பயணசீட்டு வாங்குவது , சட்ட மன்ற உறுப்பினர் தேர்தலில் நிற்பதற்கு சீட்டு வாங்குவதை  விட கடினமானது .. கடவுளே சிலையில் இருந்து உயிரோடு வந்தாலும் வரலாம் ஆனால் நடத்துனர் தனது நாற்காலியை விட்டு எழுவது என்பது கனவிலும் நடக்காத நிகழ்வு... எப்படியோ ஒருவரிடம் இருந்து ஒருவராக சில்லறையை கடத்த...

தமிழில் இணைய முகவரிகள்:

படம்
இணையத்தில் இன்று ஏராளமான தமிழ் இணையத்தளங்களைக் காணக் கூடியதாக இருக்கிறது. ஏராளமானவர்கள் வலைப் பூக்களை தமிழில் எழுதி வருகிறார்கள்.ஆனால் நாம் குறித்த தளங்களை அடைவதற்கு ஆங்கில முகவரிகளையே பயன்படுத்த வேண்டியிருந்தது ஆனால் இந்த தமிழ் இணைய முகவரிகளின் அறிமுகத்துடன் நாம் இனி முகவரிகளையும் தமிழில் எழுதலாம்.முக்கியமாக உலகத்தில் முதன் முதலாக தமிழில் இணைய முகவரியை எழுதும் வாய்ப்பை இலங்கை பெற்றுள்ளது. இணையத்தில் உள்ள வளங்கள் இணைய முகவரிகள் மூலம் அடையாளப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக www.nic.lk முகவரியைப் பார்க்கும் எவரும் இது இலங்கை அரசுக்குரியது என இலகுவில் சொல்லிவிடலாம். இந்த இணைய முகவரியில் .lK என்பது நாட்டைக் குறிக்கிறது. இவ்வாறு ஏனைய நாடுகளைக் குறிப்பதற்கும் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் பயன்பட்டு வருகின்றன. உதாரணமாக in ஆனது இந்தியாவைக் குறிக்கும். இதே போல் com.org..net... info போன்றவையும் இணைய முகவரியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக:- www.google. com எனும் போது அத ஒரு வர்த்தக நிறுவனத்திற்குரிய இணையத்தளம் என்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம் இந்த நாடுகளைக் குறிக்கும் .lk, .com, .ne...