.புஷ்புஷ்' வண்டி
இ ப்போது உள்ள சூழ்நிலையில் எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல் தட்டுப்பாடு வரலாம் .அந்த மாதிரியான சமயங்களில் மிதிவண்டி போன்ற எரிபொருள் பயன்படுத்தாத வாகனங்கள் முக்கியத்துவம் பெறலாம் . இப்போது உள்ள புதுச்சேரியை , சுதந்திரத்திற்கு முன் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்த காலத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது , அப்போது அவர்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்திய வண்டி விநோதமானது, அது என்னவென்று காண்போம் ... 'புஷ்புஷ்'(push push) என்பது ஒரு விதமான வண்டி.இந்த வண்டிகளில் சில ரிக்க்ஷா போலவும் ,சில பெட்டி வண்டிகள் மாதிரியும் இருக்கும்.மூன்று அல்லது நான்கு சக்கரமுள்ள இவ்வண்டிகளை மிருகங்கள் இழுப்பதில்லை; மனிதர்களே பின்னாலிருந்து தள்ளுவார்கள் . வண்டிகளின் அளவை பொறுத்து இரண்டு முதல் நான்கு பேர் வரை இதில் பயணம் செய்யலாம்.வண்டியில் அமர்ந்திருப்பவர்களில் ஒருவர் சுக்கானைப் பிடித்தக் கொள்ள வேண்டும். சுக்கன் என்பது ஒரு நீளமான இரும்புக் கம்பி.எந்தப் பாக்கம் போக வேண்டுமோ அந்தப் பக்கமாக இந்தச் சுக்கானைத் திருப்ப வேண்டும் . வண்டியின் பின்னாலிருந்து வண்டியைத் தள்ளுகிற மனிதனுக்கு வீதியில் வருபவர்களை தெ...